Songtexte.com Drucklogo

Unakku Thaan Songtext
von Santhosh Narayanan

Unakku Thaan Songtext

அமுத கடல் உனக்கு தான்
ஆரா மழை உனக்கு தான்
நீங்கா நிழல் உனக்கு தான்
நீ கண்மணி எனக்கு தானே
பொருந்தி போ நீ தோளோடு
மடியில் ஊஞ்சல் ஆடு

என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு வா விடுது தேனே வா

சந்திக்கா மலர் உனக்கு தான்
கண்டிக்கா மொழி உனக்கு தான்
சிந்திக்கா நொடி உனக்கு தான்
சிரிக்கும் நதி உனக்கு தானே
வழியும் எச்சில் வாயோரம்
எனது காயம் ஆறும்


என் தங்கம் முன்னாடி என் காலக் கண்ணாடி
உன் ஆசை என்னாடி நான் நடத்தி வைப்பேன்
வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்
உன் கால்கள் என் நெஞ்சில் வாழத் தேனே வா

பத்து விறல் கோலம் போட பூமி மேல மொளச்ச சித்திரமே
உன் அசைவ பாத்து பாத்து ஆயுள் கூடும் எனக்கு
புன்னகையில் காலம் போக தோகையாக சிரிச்ச பெட்டகமே
யாறுக்கிங்கு யாரு காவல் மாறி போச்சு கணக்கு

என் கூட பேசுற தோத்தோவ உனக்கு நேருல காட்டட்டுமா
சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும் சாப்பிட தரட்டுமா
அந்த அருவி போல் அன்ப தருவாளே
சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே
ஐயோ தும்மிடுடி தும்மிடுடி ஆயிசு நூறாக
என்னுயிர் உன்னோட பத்திர சொத்தாக

என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு வா விடுது தேனே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Santhosh Narayanan

Quiz
Whitney Houston sang „I Will Always Love ...“?

Fans

»Unakku Thaan« gefällt bisher niemandem.