Songtexte.com Drucklogo

Iraiva Songtext
von Hiphop Tamizha

Iraiva Songtext

Ah
இந்த வாழ்க்கை ஒரு நாடக மேடை
அதில் நடித்திடும் நடிகர்கள் நாம்
இந்த வாழ்க்கை ஒரு புத்தகம் என்றால்
அது கூறிடும் பாடம் நாம்
இந்த வாழ்கையில் கதைகளோ நூறு
அந்த கதைகளை நான் உனக்கு சொல்கிறேன் கேளு

Yeah, yeah, Hiphop தமிழா
ஹான், ஆதி
Yeah, this one′s for you
Listen

அவள் பெயர் செல்வி கற்க போனால் கல்வி
பள்ளிக்கூடம் போகையில கவனம் படிப்பில் இல்ல
புத்திமதி சொல்ல யாரும்மில்ல காரணம்
இவளுக்கு தாயும் இல்ல தந்தையோ போதயில

பரிதாபம் இவள் நிலமை பாசம் இன்றி வெறுமை
பாசம் காட்ட தந்தையுக்கு நேரம் இல்ல என்ன கொடுமை
பாசம் தேடி அலைந்தாள் பதுமை கிடைக்கல அதனால் போதைக்கு இவள் அடிமை


தோழி என்ற பெயரினில் சிலபேர்
காதலித்து பார் என்று முடிவேடும் பலபேர்
காதலித்தால் ஒருவனை அவனும் நல்லவன் இல்லை
என்ன செய்வாள் பாவம் ஒன்று அறியாத சின்ன பிள்ளை

ஒரு நாள் போதயில போர்வைக்குள்ள போகயில
அவனும் அனைதுக்கொள்ள இவளும் தடுக்கவில்லை
இது மட்டுமின்றி பல பெண்கள் உடன் தொடர்பு
கடைசியில் ஒரு நாள் இது அவளுக்கு தெரிந்து

சென்றால் பிரிந்து இவனை மறந்து
கயவனின் பசிக்கு இந்த குழந்தை விருந்து
விளைவு காதல் தோல்வி
இலவச இணைப்பாக HIV

மரண படுக்கையில் வாழ்கை தெரிந்தது
செய்த தவறை எண்ணி மனம் இங்கு வருந்துது
பதினாறு வயதிலே வாழ்கை முடிய வேண்டுமா
கண்களை மூடினாள் இறைவனிடம் வேண்டினாள்

இறைவா எனக்கொரு, எனக்கொரு வரம் தா
அழுதிடும் சின்ன பிள்ளை நான் உந்தன் கைகளில் ஏந்தி கொள்வாய்
இறைவா எனக்கொரு, எனக்கொரு வரம் தா
அழுதிடும் சின்ன பிள்ளை நான் உந்தன் கைகளில் ஏந்தி கொள்வாய்


ஓர் நாளில் எத்தனை உறவு ஒரு நொடியில் எத்தனை கணவு
கானல் நீராய் கரைகிறேனே
வாழ்கையினில் கஷ்டம் வரலாம் வாழ்வே கஷ்டம் தான் என்றால்
இறைவா நானும் என்ன செய்வேன்

கண்ணீரே (கண்ணீரே), கண்ணீரே (கண்ணீரே)
கடல் போலே நனைகின்றதே
கஷ்டங்கள் (கஷ்டங்கள்), நஷ்டங்கள் (நஷ்டங்கள்)
கண்ணுக்கு தெரிகின்றது

இவன் பெயர் சரவணன் வயதோ எட்டு
இவன் கதை கேட்டு கலம்பிட்டது கண்ணீர் சொட்டு
சொந்த தாய் தந்தை இவனை கைவிட்டது
நட்பாலே கேட்டது கடைசியில் செத்தது

தந்தை குடிகாரன் தாய் சரியில்லை போக்கு
சிறு வயதிலே இந்த பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து
சமுதாயம் ஒதுகிட தவறான நண்பர்கள்
சிறு வயதினில் போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள்

வறுமை இவன் திறமையை கட்டிபோட்டது
கலைஞன் ஆக வேண்டும் என்ற கனவை வெட்டிபோட்டது
கை கொடுக்க யாரும் இல்ல கையில் கூட காசு இல்ல
ஹையோ பாவம் என்ன செய்வான் இவன் சின்ன பிள்ளை

நண்பருடன் சேர்ந்து கொண்டு செய்தான் முதல் திருட்டு
பன்னிரெண்டு வயதில் இவன் மேல வழக்கு
இரண்டு வருடத்தில மெல்ல, மெல்ல மாறினான்
பதினான்கு வயதில் கொலைகாரன் ஆகிறான்

காசுக்காக நண்பனை காட்டிக்கொடுக்க
நடு ரோட்டில் வைத்து இவனது உயிரை பறிக்க
நாய் அடிச்சு போட்ட கூட நாலு பேர் கேட்பாங்க
யாரும் வந்து தூக்க வில்ல கேட்க ஒரு நாதி இல்ல

மரண படுக்கையில் வாழ்கை தெரிந்தது
செய்த தவறை எண்ணி மனம் இங்கு வருந்துது
பதினாறு வயதிலே வாழ்கை முடிய வேண்டுமா
கண்களை மூடினான் இறைவனிடம் வேண்டினான்

இறைவா எனக்கொரு, எனக்கொரு வரம் தா
அழுதிடும் சின்ன பிள்ளை நான் உந்தன் கைகளில் ஏந்தி கொள்வாய்
இறைவா எனக்கொரு, எனக்கொரு வரம் தா
அழுதிடும் சின்ன பிள்ளை நான் உந்தன் கைகளில் ஏந்தி கொள்வாய்

இறைவா எனக்கொரு, எனக்கொரு வரம் தா
அழுதிடும் சின்ன பிள்ளை நான் உந்தன் கைகளில் ஏந்தி கொள்வாய்
இறைவா எனக்கொரு, எனக்கொரு வரம் தா
அழுதிடும் சின்ன பிள்ளை நான் உந்தன் கைகளில் ஏந்தி கொள்வாய்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Hiphop Tamizha

Quiz
Welche Band singt das Lied „Das Beste“?

Fans

»Iraiva« gefällt bisher niemandem.