Songtexte.com Drucklogo

Oru Naalil: Composer's Dream Mix Songtext
von Yuvan Shankar Raja

Oru Naalil: Composer's Dream Mix Songtext

ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்

(ஹோ ஒவ் வோவ் ஹோ ஒவ் வோவ் ஹோ ஒவ் வோவ் ஹோ ஒவ் வோவ்)
ஹோ ஒவ் வோவ் கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஹோ ஒவ் வோவ் ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஹோ ஒவ் வோவ் கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஹோ ஒவ் வோவ் கண் மூடிக்கொண்டால்

ஹோ ஹோ ஹோஓஓ
ஹோ ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஹோ


போர்க்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்

தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
(போர் தொடுப்போம் போர் தொடுப்போம் போர் தொடுப்போம்)

ஹோ ஒவ் வோவ் அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஹோ ஒவ் வோவ் இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஹோ ஒவ் வோவ் மனம் வெட்டவெளியிலே அலைகிறதே
ஹோ ஒவ் வோவ் அந்த கடவுளை கண்டால்

ஹோ ஹோ ஹோஓஓ
யெஹ் எஹ் எஹ் எஹ்

அது உனக்கு இது எனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்

பழிபோடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே?
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று நாமும் சேர்த்து நடித்திருப்போம்


ஹோ ஒவ் வோவ்ஓஓ பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ மறுபிறவி வேண்டுமா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Yuvan Shankar Raja

Fans

»Oru Naalil: Composer's Dream Mix« gefällt bisher niemandem.