Songtexte.com Drucklogo

Neethane Songtext
von Yuvan Shankar Raja

Neethane Songtext

சில இரவுகள் இரவுகள் தான்
தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான்
போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான்
தேயா தேயாதே

சில நினைவுகள் நினைவுகள் தான்
மூழ்கா மூழ்காதே
நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே என்
இமைகளை நீவினாய்

சில இரவுகள் இரவுகள் தான்
தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான்

போகா போகாதே


சில சுவடுகள் சுவடுகள் தான்
தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான்
மூழ்கா மூழ்காதே

நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே என்
இமைகளை நீவினாய்

நீ ஓடும் பாதை என் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ ஹே

என் விழியின் கருமணியில் தேடிப்பார்
உன் காலடி தடங்களை காட்டுமே
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே
உன் சிறை என்னும் பிரிவில் தெரிந்ததே

விபத்துக்கள் எனக்குள் நடக்கவே
உன் நினைவுகள் தப்பி செல்ல வலிக்குதே
உண்மைகள் சொல்வதும்
உணர்ச்சியை கொல்வதும்

உயிர்வரை செல்வதும் நீதானே
நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே என்


இமைகளை நீவினாய்
நீ தேட தேட ஏன் தொலைகிறாய்
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய் ஹே
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை இரவலாய் கேட்கிறாய் ஹே
இதய சதுக்கம் நடுங்குதே
உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே
அலைகள் ஒதுக்கும் கிழிஞ்சலாய்
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே
ஒரு கனம் சாகிறேன்
மறு கனம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே நீதானே
நீதானே ஹே ஹே நீதானே ஹே
ஹே என் நரம்புக்குள்ளே
நீதானே ஹே ஹே
நீதானே ஹே ஹே
என் நரம்புக்குள்ளே
ஹே ஹே ஏ ஹே ஹே
ஏ ஹோ ஹோ ஹோ ஏ
ஏ ஏ ஏ ... ஓஹோ ஓஓ

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Yuvan Shankar Raja

Quiz
Wer ist gemeint mit „The King of Pop“?

Fans

»Neethane« gefällt bisher niemandem.