Songtexte.com Drucklogo

Aahaa Kathal Vandhu Songtext
von Ranjith

Aahaa Kathal Vandhu Songtext

ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல நெனச்சேன்
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்

அழகாக சிரிச்சாளே அவ கண்ணு ரெண்டும் பம்பரம்
அதிலே போய் விழுந்தாலே தல சுத்தி மயக்கம் வந்திடும்
தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேன்

ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல நெனச்சேன்
ஆனா ஆசை ஒண்னு மனசில் குதிக்க
தானா மாட்டிக்கிட்டு முழிச்சேன்

தேவதை அழகில் அவள், ராட்சசி அன்பில் அவள்
நொடியினில் வருவாள் உடன் மறைவால் மின்னலே
காலையில் கதிரும் அவள், குழப்பிடும் புதிரும் அவள்
என் மன கதவை திறந்து விடும் ஜன்னலே


என்னோட எதிர்காலம் நீதானே நில்
உன் நெஞ்சில் நான் வாழ இடம் உண்டா சொல்
என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு
தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேன்

ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல நெனச்சேன்

அடிக்கடி தூக்கம் கேட, அடிதடி நெஞ்சில் வர
இது என்ன வலியா இல்லை சுகமா சொல்லிடு
மேல் இமை காய்ச்சல் தர, கீழ் இமை மருந்தை தர
உன் முகவரியை மறைப்பதென்ன தந்திடு

ஆளில்லா தீவாக ஆனேனே நான்
அங்கே நீ வந்தாலே பிழைப்பேனே வா
பேர் தெரியா பூவே பொய் பேசும் அழகே
தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேன்

ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க
அடடா தப்பி செல்ல நெனச்சேன்

அழகாக சிரிச்சாளே அவ கண்ணு ரெண்டும் பம்பரம்
அதிலே போய் விழுந்தாலே தல சுத்தி மயக்கம் வந்திடும்
தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேன்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Ranjith

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Aahaa Kathal Vandhu« gefällt bisher niemandem.