Songtexte.com Drucklogo

Kadavulum Kadhalum Songtext
von Mani Sharma

Kadavulum Kadhalum Songtext

கடவுளும் காதலும் வேறு இல்லை
இது வரை பார்த்தவர் யாரும் இல்லை
முதன்முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே

காமமும் காதலும் வேறு இல்லை
எவருக்கும் இது வரை தெரியவில்லை
முதன்முதல் இரண்டையும் புரிந்தவள் நான் தானே

தலை கீழ் தெரியுதே வானம்
தலை மேல் உருளுதே பூமி
கலராய் தெரியுதே காற்று
எல்லாம் காதலே

கடவுளும் காதலும் வேறு இல்லை
இது வரை பார்த்தவர் யாரும் இல்லை
முதன்முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே

ஆடைகள் அணிந்து அருவியும் நடந்தால்
உன்னை போல் இருக்கும் என்றுணர்ந்தேன்
மீசையும் முளைத்து மின்னலும் நடந்தால்
உன்னை போல் இருக்கும் என்றுணர்ந்தேன்


நீ சிந்திய மௌனத்தை சேர்த்து தான்
இசைக்கிறேன் நான் ஒரு இன்னிசை
நீ செய்யும் வன்முறை ரசித்து தான்
நான் கூட கற்கிறேன் பண்ணிசை
உன் மென்மையை விரும்புதே என் மனம்
போர்களம் புகுந்திட வேண்டாம்
உன் வன்மையை விரும்புதே பெண்மை தான்
அகிம்சையாய் மாறிட வேண்டாம்

மெல்லினம் என்பது பெண்மை
வல்லினம் என்பது ஆண்மை
இடையினம் என்பது மென்மை
இது தான் உண்மையே


முதல் முறை உன்னை நான் பார்த்ததிலிருந்து
இது வரை என்னை நான் பார்த்ததில்லை
உன்னை கண்ட இரவில் கரைந்ததில் இருந்து
இது வரை இமைகள் மூடவில்லை
உன் நிழலிலும் வர்ணங்கள் தெரியுதே
இது என்ன அதிசயம் சொல்லிடு
இரவெல்லாம் பகலாய் தோன்றுதே
இது என்ன ரகசியம் சொல்லிடு
நீ புன்னகை சிந்திடும் நொடிகளில்
நான் சிதறி போகிறேன் அள்ளிடு
உன் நுனி விரல் தீண்டிடும் நொடிகளில்
பொசுக்கென்று மலர்கிறேன் கிள்ளிடு
அழகிய வன்முறை செய் செய்
அதில் கொஞ்சம் இம்சைகள் வை வை
அது தான் காதலில் மெய் மெய்
அதில் இல்லை பொய்யடி

கடவுளும் காதலும் வேறு இல்லை
இது வரை பார்த்தவர் யாரும் இல்லை
முதன்முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Mani Sharma

Fans

»Kadavulum Kadhalum« gefällt bisher niemandem.