Songtexte.com Drucklogo

Oru Ooril Songtext
von Karthik

Oru Ooril Songtext

She is a fantasy sh nana nana oh oh
Sweet as a harmony sh nana nana oh oh
now now she is a mystery shu nana nana oh oh
Fill the heart with ecstasy sh nana nana oh oh

oah oah yeah yeah hey
ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே

அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சயம் போலிருக்கும்

எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே

முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே

ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே
மரகத சோம்பல் முறிப்பளே


புல் வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே

காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தில் குழியில்

சிறு செடிகளும் நடலாம்

அவள் கன்னத்தில் குழியில் – அழகழகாய்
சிறு செடிகளும் நடலாம் – விதவிதமாய்
ஏதொ ஏதொ தனித்துவம் அவளிடம்

ததும்பிடும் ததும்பிடுமே
ஒரு ஊரில் அழகே அழகே
ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே

அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே

மகரந்தம் தாங்கும் மலர் போலே
தனி ஒரு வாசம் அவள் மேலே
புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழ்கள்


தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்
அவள் கடந்திடும் போது
தலை அனிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும் போது – நிச்சயமாய்
தலை அனிச்சையாய் திரும்பும் – அவள் புறமாய்
என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல
மொழியினில் வழி இல்லையே
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதல் முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Karthik

Fans

»Oru Ooril« gefällt bisher niemandem.