Songtexte.com Drucklogo

Kangal Kalangida Songtext
von Karthik

Kangal Kalangida Songtext

கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட
காலச் சக்கரம் திரும்பிடுதே
கைகள் கோர்த்திட கைகள் கோர்த்திட
கல்லும் மண்ணும் உயிர் பெறுதே

கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட
காலச் சக்கரம் திரும்பிடுதே
கைகள் கோர்த்திட கைகள் கோர்த்திட
கல்லும் மண்ணும் உயிர் பெறுதே

மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள்
மீண்டும் கிளைக்கு சென்றிடுதே
கடந்த காலத்தை திருப்பி தந்து
கடவுளை நட்பு வென்றிடுதே

மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள்
மீண்டும் கிளைக்கு சென்றிடுதே
கடந்த காலத்தை திருப்பி தந்து
கடவுளை நட்பு வென்றிடுதே

ஒன்றாய் சிரித்து அழுத இடத்தில்
மறு ஜென்மம் எடுக்கிறோமே


தோற்றம் மாறலாம்
தொலைவில் போகலாம்
ஞாபக மேகம் கலையாதே
முகங்கள் மாறலாம்
முகவரி மாறலாம்
நட்பின் கற்பு என்றும் மாறாதே

படித்த நாட்களிங்கு பாத்திரமாக
பிடித்த நாடகம் நடக்கிறது
வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி தான் வாழ
வரங்கள் நமக்கு மட்டும் கிடைக்கிறது

அட தொப்புள் கொடியின் உறவெல்லாம்
வெறும் பத்தே பத்து மாசம்
நாம் தீயில் சேர்ந்து வேகும் வரை
இந்த கல்லூரி நம்முடன் பேசும்

ஒன்றாய் சிரித்து அழுத இடத்தில்
மறு ஜென்மம் எடுக்கிறோமே

வார்த்தை சங்கிலி அறுந்து போகலாம்
விழியின் மொழிகள் மட்டும் மாறாதே
காற்றில் பேசி நாம் விதைத்த வார்த்தைகள்
விருட்சமாகி நிற்கும் அழியாதே

வானம் தாண்டி எங்கும் பறந்திடும் போதும்
வேர்கள் நமக்கு என்றும் இதுவல்லவா
கடலை பிரிந்த நீர் கார்முகிலாகும்
மீண்டும் மழையாய் தொடுமல்லவா


நாம் கனவுகள் வளர்த்து திரிந்தோமே
பல இரவும் பகலும் இங்கே
இரு கைகள் குவித்து கும்பிடுவோம்
அட இதை விட கோவில் எங்கே

ஒன்றாய் சிரித்து அழுத இடத்தில்
மறு ஜென்மம் எடுக்கிறோமே

கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட
காலச் சக்கரம் திரும்பிடுதே
கைகள் கோர்த்திட கைகள் கோர்த்திட
கல்லும் மண்ணும் உயிர் பெறுதே

கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட
காலச் சக்கரம் திரும்பிடுதே
கைகள் கோர்த்திட கைகள் கோர்த்திட
கல்லும் மண்ணும் உயிர் பெறுதே

மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள்
மீண்டும் கிளைக்கு சென்றிடுதே
கடந்த காலத்தை திருப்பி தந்து
கடவுளை நட்பு வென்றிடுதே

மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள்
மீண்டும் கிளைக்கு சென்றிடுதே
கடந்த காலத்தை திருப்பி தந்து
கடவுளை நட்பு வென்றிடுதே

ஒன்றாய் சிரித்து அழுத இடத்தில்
மறு ஜென்மம் எடுக்கிறோமே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Karthik

Fans

»Kangal Kalangida« gefällt bisher niemandem.