Songtexte.com Drucklogo

Kavidhai Kelungal Karuvil Songtext
von Ilaiyaraaja

Kavidhai Kelungal Karuvil Songtext

கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள்
இதுவும் ஒரு வகை யாகம்

பூமி இங்கு சுற்றும் மட்டும்
ஆட வந்தேன் என்ன நட்டம்
பூமி இங்கு சுற்றும் மட்டும்
ஆட வந்தேன் என்ன நட்டம்
ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும்

கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள்
இதுவும் ஒரு வகை யாகம்


நேற்று என் பாட்டு ஸ்ருதியில் விலகியதே
பாதை சொல்லாமல் விதியும் விலகியதே
காலம் நேரம் சேரவில்லை
காதல் ரேகை கையில் இல்லை
சாக போனேன் சாகவில்லை
மூச்சு உண்டு வாழவில்லை

வாய் திறந்தேன் வார்த்தை இல்லை
கண் திறந்தேன் பார்வை இல்லை
தனிமையே இளமையின் சோதனை
இவள் மனம் புரியுமா இது விடுகதை

கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள்
நடனம் பாருங்கள் ஓ

ஜகன ஜகன ஜம் ஜம் தக்க
ஜகன ஜகன ஜம் ஜம்
ஜகன ஜகன ஜம் ஜம் தக்க
ஜகன ஜகன ஜம் ஜம்


ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்

ஜகன தீம்த ஜகன தீம்த தீம்த தீம்த தீம்த தீம்த
ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட

பாறை மீது பவள மல்லிகை பதியம் போட்டதாரு
ஓடும் நீரில் காதல் கடிதம் எழுதிவிட்டது யாரு
அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை விதைத்து விட்டது யாரு
அலையில் இருந்து உலையில் விழுந்து துடி துடிக்கிது மீனு

இவள் கனவுகள் நனவாக மறுபடி ஒரு உறவு
சலங்கைகள் புது இசை பாட விடியட்டும் இந்த இரவு
கிழக்கு வெளிச்சம் இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில் கனவு பலிக்கட்டும்
இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும்

ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட
ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Kavidhai Kelungal Karuvil« gefällt bisher niemandem.