Songtexte.com Drucklogo

Alli Arjuna Songtext
von A.R. Rahman

Alli Arjuna Songtext

வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்
எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்
வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்
எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்
குந்தனும் குந்தனும் குந்தனும் குந்தனும்
இடம் பிடிக்க முந்தணும் முந்தணும்

யாதவனாம் அந்த மாதவனும்
அவன் மச்சுனனாம் அந்த அர்ச்சுனனும்
யாத்திரை வருகையிலே தீர்த்த யாத்திரை வருகையிலே
நாடு கடந்து காடு கடந்து மதுரைக்கு வாராக
தென் மதுரைக்கு வாராக

அங்கு நடப்பது அல்லி ராஜ்ஜியம்
அத்தனை ஆண்களும் சுத்த பூஜ்ஜியம்
அல்லியோ புது ரோசா பார்த்தான் அர்ஜுன மகராசா
அல்லி மலருல கள்ளு வடியுது
அர்ஜுனன் முகத்துல ஜொள்ளு வடியுது
ஆரம்பமாகுது நாடக காதலு
ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்குற மோதலு


அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி
முகத்தழகி ஆமா முகத்தழகி மருதாணி பூசிய நகத்தழகி
கோவில் தூண் போல தொடையழகி
கொம்பேறி மூக்கன் போல சடையழகி

அவ நடக்குற நடைய பாத்து
தென்றல் காத்து அத பாத்து உடல் வேர்த்து
உடன் தோத்து அல்லி வருகிறாளே
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி

பிரியசகியே பிரியசகியே மழைநாளா இது மழைநாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன
மோகன நாடகம் நடிப்பதென்ன

பிரியசகியே பிரியசகியே மழைநாளா இது மழைநாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன
நல்ல சகுனம் இது நல்ல சகுனம் ஒரு நாயகன் வரக்கூடும்
உங்க வாய் வெளுக்க இரு விழி சிவக்க
காதல் நோய் தனை தரக்கூடும்


யாரடி அவன் யாரடி வீராதி வீரனோ கூறடி
சூராதி சூரனோ கூறடி
இந்த அல்லியை ஜாதி மல்லியை இன்பவல்லியை உயிர்கொல்லியை
வெல்லத் தகுந்தவனோ ஏழு வண்ணம் மிகுந்தவனோ
யாரடி யாரடி

அவையிருக்கும் அத்தனை பேருக்கும் வணக்கம் வணக்கம் வணக்கம்
என் வணக்கத்திலே தான் தமிழ் மணக்கும்
பஞ்ச பாண்டவர் அஞ்சு பேர்கள்
நடுவினில் நான் பிறந்தேன்
அர்ஜுனன் என் பேரு
இரத்தினபுரி தான் என் ஊரு

கண்ணா கண்ணா
ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்
அர்ஜுனனே என் ஆருயிர் தோழா
மதுரையை ஆள்கிற அல்லி
என் மனதை எடுத்தாலே கள்ளி
என் உள்ளத்தை ஒட்டிய பல்லி
அவளை ஒடுக்கனும் படுக்கையில் புள்ளி
இந்த சமையத்தில் உதவனும் கண்ணா
எங்கள சேத்து நீ வைக்கணும் ஒண்ணா

நான் பாமாவுக்குத்தாண்டா மாமா அதை நீ மறக்காதே ஆமா
உன்னை விட்டால் எனக்கு யாரு உதவி செய்வார் கூறு
நான் மார்க்கங்கள் சொல்வேன் கேளு
மணமாலையை தாங்கும் உன் தோளு

நான் நன்னதுவியில்லை என்றிருக்க
என் மணிக்கழுத்தில் தாலி கட்டலாமா கட்டலாமா
என் மேல குத்தமில்ல உன்ன கண்ட முதலா என் நெஞ்சு சுத்தமல்ல
என் மேல குத்தமில்ல உன்ன கண்ட முதலா என் நெஞ்சு சுத்தமல்ல

நீ போட்டது எத்தனை வேடமடா
குந்தி புத்திரனாய் வந்த மூடமடா
வீரன் என்றால் நீ வில்லெடு
இந்த பூவையின் மேலே போர் தொடு

ஆ... ஆ
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
நாம் தாயால் பிறந்தோம் பிறந்தோம்
தமிழால் வளர்ந்தோம் வளர்ந்தோம்
தாயும் தமிழும் பெண்தானே இரண்டும் இரண்டு கண்தானே
தாயும் தமிழும் பெண்தானே இரண்டும் இரண்டு கண்தானே

பரங்கியர்க்கு பாரத தாய் தான் அடிமையாவதா
அவள் கைவிலங்காலும் கால் விலங்காலும் நாளும் நோவதா
விடுதலை வேள்வியில் கொடுதலை
வெள்ளையன் செய்வானோ சுடுதலை
மக்களுக்கில்லை சூடு இது மாபெரும் மானக்கேடு
எங்கே போகும் நாடு இது யாமிருக்கும் தாய் வீடு
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Whitney Houston sang „I Will Always Love ...“?

Fans

»Alli Arjuna« gefällt bisher niemandem.