Songtexte.com Drucklogo

Merkey Vidhaitha Songtext
von Tippu

Merkey Vidhaitha Songtext

மேற்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்

மேற்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்

தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்
இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில்
ஒளிசாட்டை எடுத்தால் என்ன
விஸ்வரூபம் கொண்டு விண்ணை
இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன

மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து
இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து

கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு
கல்லறைகள் அல்ல
சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல
இறக்கை கட்டி இறக்கை கட்டி வாடா
வானம் உண்டு வெல்ல
வண்ண சிறகின் முன்னே வானம் பெரிதல்ல


இதயம் துணிந்து எழுந்த பின்னாலே
இமய மலை உந்தன் இடுப்புக்கு கீழே
நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும்
விரல்களில் எரிமலை உண்டு வெடிக்கட்டும்
முட்டுங்கள் திறக்கும் என்னும் புது bible கேட்கட்டும்

சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம்
தீ வளர்த்து பார்ப்போம்
விடியல் வரும் முன்னே இருள் எடுத்து கொள்வோம்
குட்டுப்பட்டு குட்டுப்பட்ட கூட்டம்
குனிந்த கதை போதும்
பொறுமை மீறும் போது
புழுவும் புலி ஆகும்

தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா
சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா
முகத்திலே படித்தவர் ஒன்றாய் திரட்டுவோம்
நிலத்திலே பூமியை முட்டி புரட்டுவோம்
வறுமைக்கு பிறந்த கூட்டம் வயதை ஆளட்டும்

மேற்கே விதைத்த சூரியனே உன்னை
கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்


தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்
இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில்
ஒளிசாட்டை எடுத்தால் என்ன
விஸ்வரூபம் கொண்டு விண்ணை
இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன

மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து
இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து
அச்சம் இல்லை, அச்சம் இல்லையே...

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
„Grenade“ ist von welchem Künstler?

Fans

»Merkey Vidhaitha« gefällt bisher niemandem.