Songtexte.com Drucklogo

Megam Pola Songtext
von Shankar Mahadevan

Megam Pola Songtext

மேகம் போல
ஒரு காதல் வந்ததடி
நீரை வார்க்கும்மென
நின்றேன் நின்றேனே

மின்னல் மின்னி இடி
தந்து சென்றதடி
கண்ணில் மழை பெருக
வெந்தேன் வெந்தேனே

மனசு தீப் பிடித்து எரிகிறதே
என் மார்புக்கூட்டில்
உயிர் வேகிறதே
உயிர் வேகும் போதும்
உன் பேர் சொல்கிறதே

மேகம் போல
ஒரு காதல் வந்ததடி
நீரை வார்க்கும்மென
நின்றேன் நின்றேனே


மின்னல் மின்னி இடி
தந்து சென்றதடி
கண்ணில் மழை பெருக
வெந்தேன் வெந்தேனே

உயிரே என்றழைக்காத
காதல் எது
உயிரே நம் உடல்
கொள்ளும் சோகம் இது
கண்ணோடு மெதுவாக
தொடங்கும் இது
கண்ணீரில் முடிகின்ற
பயணம் இது
காதல் என்ற வில்லில்
என்னை அம்பாய் செய்தாய்
வில்லும் அம்பும் ஒன்றாய்
சேர்ந்து வாழாதே
விட்டு போகும் போதே
விறகாகிபோனேன்
விறக்குக்குள்ளே ரத்த
ஓட்டம் கிடையாதே
உயிர் விட்டு போனாலும்
உனக்கான என் எண்ணம்
உடல் விட்டு போகாதடி ஓ ஓ


மேகம் போல
ஒரு காதல் வந்ததடி
நீரை வார்க்கும்மென
நின்றேன் நின்றேனே

நெஞ்சோடு வலி வந்து
குடி கொண்டது
நினைவென்ற
முள் காடு வளர்கின்றது
காணாத இரு கண்ணும்
உடைகின்றது
கடல் ஏழும் கடன் வாங்கி
அழுகின்றது
காதல் என்ற ரோஜா
நெஞ்சில் நட்டுப் போனாய்
நீர் வார்க்க என் கண்ணில்
நீர் இல்லை
அள்ளி தின்ற பார்வை
சொல்லி சென்ற வார்த்தை
எனை விட்டுப்
போன பின்னே வாழ்வில்லை
பெற்றாலே அவளும் பெண்
கொன்றாய் நீயும் பெண்
பழி போட வழி இல்லையே
பெற்றாலே அவளும் பெண்
கொன்றாய் நீயும் பெண்
பழி போட வழி இல்லையே
ஓ ஓ ஓ

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Megam Pola« gefällt bisher niemandem.