Po Songtext
von Sean Roldan
Po Songtext
போ, நம் கனவுகள் கலைந்தது போதும் போ
போ, நம் உறவினில் விரிசல்கள் போதும் போ
போ, என் உயிரினை உடைத்தது போதும் போ
நம் தனிமையின் துணை அது போதும் போ
உன்னால் நான் அழுதது போதுமே, போ
என்னால் நீ தவித்தது போதுமே, போ-போ
சொல்லாமல் என்தன் பக்கம் வந்த உறவே
இல்லாமல் இன்று எட்டிப் போன நிலவே
கொல்லாமல் தினம் என்னைக் கொல்லும் நினைவே, நீ போ
சொல்லாமல் என்தன் பக்கம் வந்த உறவே
இல்லாமல் இன்று எட்டிப் போன நிலவே
கொல்லாமல் தினம் என்னைக் கொல்லும் நினைவே, நீ போ
கண்ணீரிலே தள்ளாடுதே, கண் ரெண்டுமே மூழ்காமலே
நம் காதலும் என்னாகுமோ?
சொல்லு, அன்பே
கண்ணாடி மேல் கல்லாகவே
நான் மோதினேன் நீ வீழவே
தூளானதே உன் நெஞ்சமும்
இங்கே, அன்பே
உன் பிம்பம் என்னோடு வாழும்
என் நெஞ்சைக் கொல்லாமலே
தீயோடு தீவாக காயங்கள் நூறாக
நான் வாழ்வேன் வாழாமலே
சொல்லாமல் என்தன் பக்கம் வந்த உறவே
இல்லாமல் இன்று எட்டிப் போன நிலவே
ஒ... சொல்லாமல் என்தன் பக்கம் வந்த உறவே
இல்லாமல் இன்று எட்டிப் போன நிலவே
கொல்லாமல் தினம் என்னைக் கொல்லும் நினைவே, நீ போ
போ, நம் கனவுகள் கலைந்தது போதும் போ
போ, நம் உறவினில் விரிசல்கள் போதும் போ
உன்னால் நான் அழுதது போதுமே, போ
என்னால் நீ தவித்தது போதுமே, போ-போ
போ, நம் உறவினில் விரிசல்கள் போதும் போ
போ, என் உயிரினை உடைத்தது போதும் போ
நம் தனிமையின் துணை அது போதும் போ
உன்னால் நான் அழுதது போதுமே, போ
என்னால் நீ தவித்தது போதுமே, போ-போ
சொல்லாமல் என்தன் பக்கம் வந்த உறவே
இல்லாமல் இன்று எட்டிப் போன நிலவே
கொல்லாமல் தினம் என்னைக் கொல்லும் நினைவே, நீ போ
சொல்லாமல் என்தன் பக்கம் வந்த உறவே
இல்லாமல் இன்று எட்டிப் போன நிலவே
கொல்லாமல் தினம் என்னைக் கொல்லும் நினைவே, நீ போ
கண்ணீரிலே தள்ளாடுதே, கண் ரெண்டுமே மூழ்காமலே
நம் காதலும் என்னாகுமோ?
சொல்லு, அன்பே
கண்ணாடி மேல் கல்லாகவே
நான் மோதினேன் நீ வீழவே
தூளானதே உன் நெஞ்சமும்
இங்கே, அன்பே
உன் பிம்பம் என்னோடு வாழும்
என் நெஞ்சைக் கொல்லாமலே
தீயோடு தீவாக காயங்கள் நூறாக
நான் வாழ்வேன் வாழாமலே
சொல்லாமல் என்தன் பக்கம் வந்த உறவே
இல்லாமல் இன்று எட்டிப் போன நிலவே
ஒ... சொல்லாமல் என்தன் பக்கம் வந்த உறவே
இல்லாமல் இன்று எட்டிப் போன நிலவே
கொல்லாமல் தினம் என்னைக் கொல்லும் நினைவே, நீ போ
போ, நம் கனவுகள் கலைந்தது போதும் போ
போ, நம் உறவினில் விரிசல்கள் போதும் போ
உன்னால் நான் அழுதது போதுமே, போ
என்னால் நீ தவித்தது போதுமே, போ-போ
Writer(s): Mohan Rajan, Sean Roldan Lyrics powered by www.musixmatch.com