Songtexte.com Drucklogo

Vaanam Kidukidunga Songtext
von Muthu Sirpi

Vaanam Kidukidunga Songtext

செப்பு செலையழகன்
சிங்கம் வச்ச பல்லழகன்
ஆணில் அழகனடி
அரசாளும் வம்சமடி
சிலம்பெடுத்து சுத்துனாக்க
காத்துக்கும்தான் வேர்க்குமடி

வானம் கிடு-கிடுங்க, வைகை நதி நடு-நடுங்க
வாடி வாசல் காளை போல வாரான் விருமன்
எட்டு நாடும் வெடி-வெடிக்க
எதிரி எல்லாம் பட-படக்க
எங்க மானம் காக்க வந்தான் எங்க பரமன்

அடிடா இடி முழங்க (ஹேய்-ஹேய்-ஹேய்-ஹேய்)
எதிரி கல கலங்க (ஹேய்-ஹேய்-ஹேய்-ஹேய்)
அடிடா இடி முழங்க, எதிரி கல-கலங்க
பாசம், ரோசம் ரெண்டையும் கொண்டாட வாரான்டா

விருமன் மானம் மட்டும்தான் பெரும் சொத்து
அதை சீண்டி பார்த்தாலே விழும் குத்து
விருமன் மானம் மட்டும்தான் பெரும் சொத்து
அதை சீண்டி பார்த்தாலே விழும் குத்து


வானம் கிடு-கிடுங்க, வைகை நதி நடு-நடுங்க
வாடி வாசல் காளை போல வாரான் விருமன்
எட்டு நாடும் வெடி-வெடிக்க, எதிரி எல்லாம் பட-படக்க
எங்க மானம் காக்க வந்தான் எங்க பரமன்

கும்மி அடிச்சு தூபம் போடு
விளைஞ்சு நிக்கும் சம்பா காடு
இல்லையின்னு சொல்லாம வாழ்ந்த நாடு
பசிக்கும் வயித்துக்கு சோற போடு

அங்கு தென்குமரி கண்டம் வரை, எங்க ஆதி நிலம் டா
தென்னாட்டை ஆண்டதெல்லாம், எங்க தமிழ் இனம் டா
பயமே அறியாத பரம்பரை டா
பழச மறக்காத தலைமுறை டா
விருமன் நடந்தா ஊர்வலம் டா
வேங்கை புலிக்கும் ஜொரம் வரும் டா
ஆத்தா கருவறை தான், எங்க படைக்களம் டா
அப்பத்தா தண்டட்டியும், இங்க அணுகுண்டு டா

இந்த மாசி பச்சை, சிறு பொட்டி குடம்
நாங்க கட்டிகாத்த, ஒரு அடையாள டா
இந்த கதைய கேட்டா
எங்க பாப்பம்பட்டி கெழவி பொட்டி
கீழடிக்கும் மேல பேசும்மடா


வானம் கிடு-கிடுங்க, வைகை நதி நடு-நடுங்க
வாடி வாசல் காளை போல வாரான் விருமன்
எட்டு நாடும் வெடி-வெடிக்க, எதிரி எல்லாம் பட-படக்க
எங்க மானம் காக்க வந்தான் எங்க பரமன்

அடிடா இடி முழங்க (ஹேய்-ஹேய்-ஹேய்-ஹேய்)
எதிரி கல கலங்க (ஹேய்-ஹேய்-ஹேய்-ஹேய்)
அடிடா இடி முழங்க, எதிரி கல-கலங்க
பாசம், ரோசம் ரெண்டையும் கொண்டாட வாரான்டா

விருமன் மானம் மட்டும்தான் பெரும் சொத்து
அதை சீண்டி பார்த்தாலே விழும் குத்து
விருமன் மானம் மட்டும்தான் பெரும் சொத்து
அதை சீண்டி பார்த்தாலே விழும் குத்து

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Vaanam Kidukidunga« gefällt bisher niemandem.