Songtexte.com Drucklogo

Meenamma Meenamma Songtext
von Mano & K. S. Chithra

Meenamma Meenamma Songtext

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புதுராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா

சிங்கம் ஒன்று நேரில் வந்து
ராஜநடை போடுதே
தங்கமகன் தேரில் வந்தால்
கோடி மின்னல் சூழுதே

முத்தை அள்ளி வீசி இங்கு
வித்தை செய்யும் பூங்கொடி
தத்தி, தத்தி தாவி வந்து
கையில் என்னை ஏந்தடி

மோகம் கொண்ட மன்மதனும்
பூங்கணைகள் போடவே
காயம் பட்ட காளை நெஞ்சம்
காமன் கணை போடுது


மந்திரங்கள் காதில் சொல்லும்
இந்திரனின் ஜாலமோ
சந்திரர்கள் சூரியர்கள்
போவதென்ன மாயமோ

இதமாக சுகம் காண
துணை நீயும் இங்கு வேண்டுமே
சுகமான புதுராகம் இனி கேட்கத்தான்

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
ஆஹா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா

இட்ட அடி நோகும் அம்மா
பூவை அள்ளி தூவுங்கள்
மொட்டு உடல் வாடும் அம்மா
பட்டு மெத்தை போடுங்கள்

சங்கத்தமிழ் காளை இவன்
பிள்ளைத் தமிழ் பேசுங்கள்
சந்தனத்தை தான் துடைத்து
நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்

பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி
லாலி லல்லி கூறுங்கள்
நெஞ்சமெனும் மஞ்சம் அதில்
நான் இணைய வாழ்த்துங்கள்


பள்ளியறை நேரம் இது
தள்ளி நின்று பாடுங்கள்
சொல்லித் தர தேவையில்லை
பூங்கதவை மூடுங்கள்

சுகமான புதுராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புதுராகம் உருவாகும் வேளை நாணமே
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
ஆஹா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Mano & K. S. Chithra

Quiz
Whitney Houston sang „I Will Always Love ...“?

Fans

»Meenamma Meenamma« gefällt bisher niemandem.