Songtexte.com Drucklogo

En Vennilave Songtext
von KK

En Vennilave Songtext

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே

உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏனோ, வீசிவிட்டாய்?
மண்ணில் ஏனோ, வீசிவிட்டாய்?

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே

பனியில் இலையற்ற தனிமரம் நான்
பாலையில் துடித்திடும் சிறுப்புழு நான்
காதல் தேவதைப் போல் வந்து
தல பலிக்கேட்பதேன் மோகினியே?


நீ ஏன் எரித்தாய் மீனாட்சி?
உன் நிழலில் வாழும் மதுரையடி
மழையாய் தனலானேன்
மண்ணில் ஏனோ, வீசிவிட்டாய்?

கள்ளிப் பாலை ஊற்றிவிட்டு
வெள்ளி நிலவாய் போனவளே
என்னில் வளர்த்த பொற்சிறகை
ஒடிந்திட நடந்திடும் கொடும் புயலே

அழகரைத் தொட்டதால் வைகை நதி
அலை கடல் சேரா மதுரையடி
என் விடிவாள் முழிவாள் நீ
மண்ணில் ஏனோ, வீசிவிட்டாய்?

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே

உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏனோ, வீசிவிட்டாய்?
மண்ணில் ஏனோ, வீசிவிட்டாய்?

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von KK

Fans

»En Vennilave« gefällt bisher niemandem.