Anarkali Songtext
von Karthik & Chitra Sivaraman
Anarkali Songtext
அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயேடி
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயேடி
சந்தித்தேன் அடி உன் கண்களால் சுவாசித்தேன் அடி உன் பார்வையால்
அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தேன்
கடல் காற்று நீ நான் பாய்மரம் நதி காற்று நீ நான் தாவரம்
அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ
இயந்திர மனிதனை போல் உன்னை செய்வேனே
இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைத்தேனே
அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
கவிஞனுக்கெல்லாம் குரும்பு அதிகம் கவிஞனின் குரும்பில் சுவை அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
நடை நடந்து போகையில் நீ இலக்கணமே
ஞானம் கொண்டு பார்க்கையில் நீ இலக்கியமே
அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ
நறுமணம் என்பதர்க்கு முகவரி பூக்கள் தானே என் மனம் என்பதர்க்கு முகவரி நீ தானே
என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல் வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீதான்
இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ
என்னிடம் சேரும் முகவரி நீதான்
மழை துளிக்கு மேகமே முதல் முகவரி உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ

Writer(s): Pa. Vijay, A R Rahman Lyrics powered by www.musixmatch.com