Songtexte.com Drucklogo

Naan Aval Illai Songtext
von Karthik & Chinmayi

Naan Aval Illai Songtext

நான் அவள் இல்லை
நான் அவள் இல்லை
அழகிலும் குணத்திலும்
எதிலும் நான் அவள் இல்லை

உன் மேலே காதல் கொண்டேன்
உன் வானத்தில் ரெண்டாம் நிலவாய்
என்னை பூக்க செய்வாயா
செய்வாயா

அவள் எங்கே விட்டுப் போனாளோ
அங்கே தொடங்கி உன்னை நான்
காதல் செய்வேனே

ஆனால் அன்பே ஆனால் அன்பே
அவளுக்கு கொடுத்த இதயத்திலே
உன்னை வைத்து பார்க்க தயங்குகிறேன்

ஆனால் அன்பே ஆனால் அன்பே
அவள் விட்டுப் பறந்த உலகத்திலே
உன்னோடு பறக்க முயலுகிறேன்

என் வானிலே ஓர் முகிலாய்
நீ தோன்றினாய்


மெதுவாக நீ வானமாய்
விரிந்தாயடி என் நெஞ்சிலே
என் பூமியில் ஓர் செடியாய்
பூ நீட்டினாய்

மெதுவாக நீ காடென
படர்ந்தாயடி என் நெஞ்சிலே

உன்னாலே விழியோடும் சிரிக்கின்றேன் மீண்டும் இன்று
உன்னாலே எனை மீண்டும் திறந்தேன் பெண்ணே

இருளோடு நேற்றை நான் தேடினேன்
எதிர்கால தீபம் காட்டினாய்

ஆனால் அன்பே ஆனால் அன்பே
அவளுக்கு கொடுத்த இதயத்திலே
உன்னை வைத்து பார்க்க உன்னை வைத்து பார்க்க

வா என்று நான் சொல்லும் முன்பே
என் பிள்ளைக்கு தாயென்று ஆனாயே நீ அன்று

ஏனென்று நான் கேட்கும் முன்னே
நீ என் காதின் ஓரத்தில் முத்தத்தில் சொன்னாயடி

மடி மீது கிடத்தி
தலை கோதினாள்
உன் காதலால்
என் காயம் ஆற்றினாள்


நீதான் அன்பே நீதான் அன்பே
இனி எந்தன் நிலவு இனி எந்தன் உறவு
இனி எந்தன் கனவு

நீதான் அன்பே நீதான் அன்பே
இனி எந்தன் இதயம் இனி எந்தன் பயணம்
இனி எந்தன் உலகம்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»Naan Aval Illai« gefällt bisher niemandem.