Songtexte.com Drucklogo

Nethu Oruthara Songtext
von K. S. Chithra

Nethu Oruthara Songtext

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

காத்து... குளிர் காத்து
கூத்து... என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான்... புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க... கூட்டுத்தான்
எணஞ்சதொரு... கூட்டுத்தான்
பாட்டுத்தான்... புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க... கூட்டுத்தான்
எணஞ்சதொரு... கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்


ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசோரம் பசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம்
அடி ஆத்தி ஆத்திமரம் அரும்பு விட்டு ஆரம் பூத்தமரம்
மாத்தி மாத்தி தரும் மனசு வச்சு மால போட வரும்
பூத்தது பூத்தது பார்வ போர்த்துது போர்த்துது போர்வ
பாத்ததும் தோளில தாவ கோர்த்தது கோர்த்தது பூவ

போட்டா... கண போட்டா
கேட்டா... பதில் கேட்டா

வழி காட்டுது... பலசுகம் கூட்டுது... வருகிற...

பாட்டுத்தான்... புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க... கூட்டுத்தான்
எணஞ்சதொரு... கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு
இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே
பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே
பாத்தொரு மாதிரி ஆச்சு ராத்திரி தூக்கமும் போச்சு
காத்துல கரையுது மூச்சு காவிய மாகிட லாச்சு

பாத்து... வழி பாத்து
சேத்து... ஒன்ன சேத்து
அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது


பாட்டுத்தான்... ஹே ஹே ஹே... புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க... கூட்டுத்தான்... ஹே ஹே ஹே...
எணஞ்சதொரு... கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

காத்து... குளிர் காத்து
கூத்து... என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது

பாட்டுத்தான்... புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க... கூட்டுத்தான்
எணஞ்சதொரு... கூட்டுத்தான்
பாட்டுத்தான்... புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க... கூட்டுத்தான்
எணஞ்சதொரு... கூட்டுத்தான்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von K. S. Chithra

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»Nethu Oruthara« gefällt bisher niemandem.