Songtexte.com Drucklogo

Varungaalam Engaladhu Songtext
von Justin Prabhakaran

Varungaalam Engaladhu Songtext

வருங்காலம் எங்கள்து
வரலாறும் எங்கள்து
அதிகாரம் எங்கள்து
இதுல எதுடா உங்கள்து

நீ வேலி போட்டாலும்
காட்டாறு சிக்காது
உன் பாட்சா பேச்செல்லாம்
இனி வேலைக்காவாது

ஒரு ஓட்டுதானே வேணும்
கொஞ்சம் காசிருந்தா போதும்
Note இருந்தால் நாட்டை ஆளும் கைநாட்டும்

உன் கொள்கை யாரு கேட்டா
உன் கல்வி யாரு பாத்தா
நீ நல்லவனோ கெட்டவனோ எடுறா note′a

படுக்க நாதியில்ல ஏழைகளின் குடிசையில்
அடுக்கு மாடி மேலதான் நமது தலைவர்கள்

அழுக்கு ஆடையோடுதான் நமது குழந்தைகள்
மிதக்கும் போதையோடு ஏன் நமது இளைஞர்கள்


பசிக்கு திருடிய மனிதனை உதைக்கிறோம்
பதுக்கும் திருடனை தலைவனாய் மதிக்கிறோம்

நடிக்கும் மனிதர் பின்னாலே கூட்டங்கள்
உழைக்கும் மனிதர் வாழ்வில் போராட்டங்கள்

வருங்காலம் எங்கள்து
வரலாறும் எங்கள்து
அதிகாரம் எங்கள்து
இதுல எதுடா உங்கள்து

நீ வேலி போட்டாலும்
காட்டாறு சிக்காது
உன் பாட்சா பேச்செல்லாம்
இனி வேலைக்காவாது

ஜிந்தக்கத்தா ஜிதக்க ஜிதக்க
ஜிந்தக்கத்தா ஜிதக்க ஜிதக்க
ஜிந்தக்கத்தா ஜிதக்க ஜிதக்க
ஜிந்தக்கத்தா ஜிதக்க ஜிதக்க

என்னடா வாழ்க்கை இது
பணம்தான் பெருசாக்கிது
பணத்தோட compare பண்ணா உலகம் சிருசாக்கிது

யாருக்கிட்ட சொல்லுவோம் எங்க கொறைய
இந்த மேடையில பேசுவோன்டா நெறைய


அட வாழ்க்கையில ஏகப்பட்ட கஷ்டம் வரும்
அந்த கஷ்டத்த நீ தாண்டி வந்தா வெற்றி வரும்

இங்க அடியும் ஒதையும்
வாங்கி தொங்குது கட்சி கொடி
இது நம்ம காலம் தைரியமா ஏறி அடி அடி

கொலை கொள்ளை கற்பழிப்பு
பெருகிடுச்சு நாட்டுல
பணத்தாச காட்டி ஜனத்த
தொரத்திட்டாங்க ரோட்டில

நமக்கின்னு உரிமை இருக்கு
எதுக்கு ஒதுங்கி போகணும்
தடுக்குற ஆள உதைச்சி
ரெண்டுல ஒன்னு பாக்கணும்

மேல் படிப்பு படிக்கணுமுன்னு ஆசை
அதுக்கு ஆப்பு வைக்க திட்டம் போட்டு கொண்டு வரான் NEET'a

எல்லாருக்கும் ஒரே நீதி இருக்குதா
அட நாங்க கேட்க்கும் கேள்விகெல்லாம் ஒன்கிட்ட பதில்லு இருக்குதா

அரசியல் விளம்பரம் ஆன அது இல்லைட நெரந்தரம்
ஜாதி பேர சொல்லி இங்கே ஏகப்பட்ட கலவரம்

பதவிய புடிக்குறான் நம்ம மானத்ததான் பறிக்கிறான்
ஓட்டு போட்ட ஜனத்த எங்கடா ஒருத்தன் இப்ப மதிக்கிறான்

வெட்டு குத்த உண்டு பண்ணும் ஜாதி வேணாடா
அட ஒட்டு துணியும் மேல இல்ல செத்து போனாத்தான்

என்னன்னமோ நடக்குதிங்க கண்ணு முன்னால
நம்ம ஒன்னா இருந்தா எல்லாம் வரும் நம்ம பின்னால
ஹேய் நம்ம பின்னால
ஹேய் நம்ம பின்னால

படி படி படி படி படி படியின்னு parent′u
நீ குடி குடி குடி குடி குடியின்னு government'u

படிக்கவா குடிக்கவா
படிக்கவா குடிக்கவா
கொழம்பி போயி நிற்க்கிறான்டா student'u
Student′u student′u student'u

வருங்காலம் எங்கள்து
வரலாறும் எங்கள்து
அதிகாரம் எங்கள்து
இதுல எதுடா உங்கள்து...

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Cro nimmt es meistens ...?

Fans

»Varungaalam Engaladhu« gefällt bisher niemandem.