Songtexte.com Drucklogo

Maatram Songtext
von Inno Genga

Maatram Songtext

காலங்கள் மாறும்
கனவெல்லாம் மாறும்
சொல்லாமல் இருதயங்கள்
இடம் மாறும்

நேற்றை போல் என்றும்
இன்றே இருக்காது
நாளைகள் நாளும் நிறம் மாறிடும்

சில காலம் சாரலும்
சில காலம் வெயிலும்
கடிகாரம் ஓட ஓட
காலம் மாறுது

மாற்றங்கள் ஒன்று தான்
மாறாது வாழ்விலே
வண்ணங்கள் மாறி மாறி
வானம் நீளுது


அடடா நம் வாழ்க்கை என்பது
அதில் நூறு மாற்றம் கொண்டது
இருந்தாலும் எல்லா மாற்றமும்
அர்த்தம் உள்ளது
ஓஓஓ

பகலென்ன இரவின் மாற்றமே
இரவென்ன பகலின் மாற்றமே
மாற்றங்கள் தானே
வாழ்விலே மாயம் செய்யுது
ஓஓ

உறவே உன்னை பிரிவென்பதா
பிரிவே உன்னை உறவென்பதா
இரண்டும் சேரும் வலி என்பதே
சுகம் என்பதா

நினைவே உன்னை கனவென்பதா
கனவே உன்னை நினைவென்பதா
இது தான் வாழ்வின் அழகென்பதா
அடடா என்பதா


இன்று பூக்கும் பூக்கள்
நாளைக்கு வாடும்
இது தான் நேசமே
மறு நாளில் மீண்டும் பூ பூக்கும்
அது தான் வாழ்வின் அர்த்தமே
இருகரைகள் இல்லை என்றாலே
நதி பயணம் போகுமா
மாற்றங்கள் இல்லை என்றாலே
மனம் தன்னை உணருமா

வைகறை மேகம்
விடிகின்ற நேரம்
இரவென்னும் பாடல்
நிறம் மாறும்
வெயிலின் நாட்கள்
விடுமுறை கேட்கும்
மழை வந்து பூமி
முகம் மாறும்

மனம் ஒரு வானிலை
மழை வெயில் போலவே
எல்லாமும் சேர்ந்து வந்து
வாழ்க்கை மாறுதே

மாற்றங்கள் ஒன்று தான்
மாறாது வாழ்விலே
வண்ணங்கள் மாறி மாறி
வானம் நீளுது

நிமிடத்தில் நாட்கள் மாறிடும்
நொடிவொன்றில் வாழ்வே மாறிடும்
மாற்றங்கள் தானே நெஞ்சிலே
அர்த்தம் சேர்த்திடும் ஓஓ
பூக்கள் தான் சருகாய் மாறிடும்
சருகெல்லாம் பூவாய் மாறிடும்
மாற்றங்கள் தானே வாழ்விலே
மாயம் செய்திடும் ஓஓ

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Inno Genga

Fans

»Maatram« gefällt bisher niemandem.