Songtexte.com Drucklogo

Maya Bazaar Songtext
von Harris Jayaraj

Maya Bazaar Songtext

கட கட கட கடோத்கஜன்
பர பர பர பராக்கிரமன்
கட கட கட கடோத்கஜன்
பர பர பர, பர பர பர

திசை எங்கிலும் என் கொடி பறக்கணும்
புவனம் முழுதும் என் குரல் ஒலிக்கணும்
எதிரிகள் இரு பாதம் பனியனும்
சரணாகதி தரும் வரை நடுங்கனும்

அடி பலவான் பீமனின் மகன் அடா
அறம் தருகிற தருமாறின் உறவடா
சக புதிறரின் சங்கடம் தீர்ப்பவன்
சகலரும் தொழும் மன்னவன் தான் இவன்

கட கட கட கடோத்கஜன்
பர பர பர பராக்கிரமன்
கட கட கட கடோத்கஜன்
பர பர பர, பர பர பர...


அன்பே என் ஆருயிரே
அமுதே நீ வா அருகே
வான் முகிலோடும், இரவோடும் விளையாடும் வெண்ணிலா
விழி மீது விழி வீசி விளையாடும் பெண்ணிலா
கண்ணே உன்னை பிரியேன்
உனை எந்நாளும் நான் மறவேன்

அன்பே என் ஆருயிரே
வந்தேன் நான் உன் அருகே
உனை பகலோடும், இரவோடும் விழிகாணும் என் கனா
இமை மீதும், துயில் மீதும் நடமாடும் உன் உலா
கண்ணா உன்னை பிரியேன்
உனை எந்நாளும் நான் மறவேன்

அட நீ எனக்கு வேணுமடி தங்கமே தங்கம் தங்கம்
நான் வச்ச கண்ணு வாங்கவில்ல தங்கமே தங்கம் தங்கம்
பல முத்து மணி அள்ளி வரவா
அந்த ஆகாசத்த சீரா பெறவா
அட நீ எனக்கு வேணுமடி தங்கமே தங்கம் தங்கம்
நான் வெச்ச கண்ணு வாங்கவில்ல தங்கமே தங்கம் தங்கம்

முக்கோடி தேவர்களும், மும்மூர்த்தி தேவியரும்
இன்று உளமாற, மனதார வரம் தந்து வாழ்த்திட
உலகாள புகழ் சூட இசை பாடி போற்றிட
மணமக்கள் வாழியவே, இனி குறைவின்றி வாழியவே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Harris Jayaraj

Quiz
Welche Band singt das Lied „Das Beste“?

Fans

»Maya Bazaar« gefällt bisher niemandem.