Songtexte.com Drucklogo

Sadugudu Vizhiyil Songtext
von Hariharan

Sadugudu Vizhiyil Songtext

சடு குடு விழியில் சுடுகிற மயக்கம்
என் விடுகதை இரவு விடிவதை மறக்கும்

போர்க்கள பூமி வீசி எறிந்த பூக்களில் ஒன்று பேசியதின்று
உன்னை சாய்த்த பள்ளங்களை நிறைவாக மூடுகிறேன்
நீ என் மனதோரம் நடந்து வர ஒரு வழி சாலை போடுகிறேன்

உயிரின் கனிகள் உனதடி உன் கண்ணீர் துளிகள் எனதடி
உயிரின் கனிகள் உனதடி உன் கண்ணீர் துளிகள் எனதடி

சடு குடு விழியில் சுடுகின்ற மயக்கம்
என் விடுகதை இரவு விடிவதை மறக்கும்

மாய பெண்மையே தேடி தேடியே உன்னை தீயில் தள்ளியே மறைந்தேனே
கண்கள் கண்டதொரு ஈர காட்சியால் மண்டை நரம்புகள் நனைத்தேனே
அகதி கூடாரம் கடந்து வந்துஎன் சகதி மனவெளியில் விழுந்தாயே
சகதி மனவெளியை புல் வெளியாக்கி சிதறும் பூக்களாய் நடந்தாயே

ஈர தேவதை வாழ வாழவே தூய பாவங்கள் நான் புரிவேன்
விடியல் கீற்றினில் விசிறிகள் செய்து அடிமை காயங்கள் ஆற்றிடுவேன்
உயிரின் கனிகள் உனதடி உன் கண்ணீர் துளிகள் எனதடி
உயிரின் கனிகள் உனதடி உன் கண்ணீர் துளிகள் எனதடி

சடு குடு விழியில் சுடுகிற மயக்கம்
என் விடுகதை இரவில் விடிவதை மறக்கும்

பார்வை முன்னேறும் பாதை எங்கிலும் பாவி முட்டிகளை பொலிந்தேனே
காலம் பாணாது கவிதையை ஒன்றை கப்பல் செய்திட நினைந்தேனே
வானம் மாளிகை தான் அனுப்பிய மொத்த கர்வம் என மொழிந்தேனே
உன் சின்ன குடிசையில் ஒளிந்து கிடக்கும் யுத்த சந்தங்கள் அறியேனே

நானறியாமல் என் சிறு மீசை
உந்தன் வாசலில் மண்டியிடும்
என்னை கேட்காமல் என் குடை இனிமேல்
உன்னையும் உன்னையும் உள்ளடக்கும்

உயிரின் கனிகள் உனதடி உன் கண்ணீர் துளிகள் எனதடி
உயிரின் கனிகள் உனதடி உன் கண்ணீர் துளிகள் எனதடி

சடு குடு விழியில் சுடுகின்ற மயக்கம்
என் விடுகதை இரவில் விடிவதை மறக்கும்

போர்க்கள பூமி வீசி எறிந்த பூக்களில் ஒன்று பேசியதின்று
உன்னை சாய்த்த பள்ளங்களை நிறைவாக மூடுகிறேன்
நீ என் மனதோரம் நடந்து வர ஒரு வழி சாலை போடுகிறேன்
உயிரின் கனிகள் உனதடி உன் கண்ணீர் துளிகள் எனதடி
உயிரின் கனிகள் உனதடி உன் கண்ணீர் துளிகள் எனதடி

சடு குடு விழியில் சுடுகிற மயக்கம்
என் விடுகதை இரவு விடிவதை மறக்கும்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Sadugudu Vizhiyil« gefällt bisher niemandem.