Songtexte.com Drucklogo

Yelelo Songtext
von G.V. Prakash Kumar

Yelelo Songtext

ஏலேலோ மெதப்பு வந்திருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே
கதவ துறந்துகிட்டு காத்து அடிக்குதடா
மனசு பறக்குதுடா டோய்

விழுந்தாலும் எழுந்தாலும் மறுபடியும் விழுந்தாலும்
அடடா விழுந்த்திலும் லாபம் ஒன்னு கிடைத்ததே
நின்னாலும் நடந்தாலும் நேரா போய் கவுந்தாலும்
அடடா அதிஷ்டம் வந்து கதவை தட்டி அழைக்குதே

தூங்கும் பொம்மைக்குதான் சாவி யாரு கொடுத்தது
தோடா கைய நீட்டி கால ஆட்டி நடக்குது
நிகழ்காலம் எதிர்காலம் நலமாக இனிமாறும்
எங்கோ மேதக்குறனே என்ன பிடிங்கடா


அட்டைய போலிருந்தேன் பட்டுன்னு சுருண்டுக்குவேன்
நச்சுனு எழுந்து இப்போ நடக்க தோணுதடா
கப்பலா நான் இருந்தேன் ஆடுனா கவிழ்ந்துக்குவேன்
புயல தாண்டி இப்போ நீந்த தோணுதடா

பஞ்சரா கிடந்த பந்து sixer′u அடிக்குதடா
சுக்கரன் திசை எனக்கு சலாம் வைக்குதுடா
சந்திரன் என்ன விலை சூரியன் என்ன விலை
மொத்தமா வாங்குறேன் கேட்டுகோடா

ஏலேலோ மெதப்பு வந்திருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே

மழையா மழை அடிச்சு மெதுவா இலை விரிச்சு
தூங்கு மூஞ்சி மரம் பூத்து குலுங்குதே
பறந்தா கிளியுமுன்னு பரனில் கிடந்த பட்டம்
மாஞ்சா போட்டு இப்போ பறக்க தொடங்குதே

விதையா புதைவதெல்லாம் மரமா எழுந்திடத்தான்
இது வாழ்க்கையடா மச்சி மன்னாரு
பூஜ்ஜியம் ஆனாலும் பக்கத்தில கோடு கிழி
அதுக்கு மதிப்பு கூடுமடா


ஏலேலோ மெதப்பு வந்திருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von G.V. Prakash Kumar

Fans

»Yelelo« gefällt bisher niemandem.