Songtexte.com Drucklogo

Otha Sollaala Songtext
von G.V. Prakash Kumar

Otha Sollaala Songtext

Hey, ஒத்த சொல்லால என் உசுர எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்சத் தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா

ஏ பொட்ட காட்டுல
ஆலங்கட்டி மழை பெஞ்சு ஆறு ஒண்ணு ஓடுறத பாரு

அட பட்டாம் பூச்சி தான் என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

என் powder டப்பா தீர்ந்து போனதே
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நான் குப்புறக்க படுத்து கெடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே

ஒண்ணும் சொல்லாம உசுர தொட்டாயா
மனச இனிக்க வெச்ச சீனி மிட்டாயே

Hey, ஒத்த சொல்லால என் உசுர எடுத்து வச்சி கிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்சத் தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா

ஏ கட்ட வண்டி கட்டி வந்து தான்
அவ கண்ணழக பார்த்து போங்கடா
அட கட்டு சோறு கட்டு வந்து தான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா

கத்தாழ பழச் சிவப்பு
முத்தாத இளம் சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு
நான் கிறுக்கானேன்

Hey, ஒத்த சொல்லால என் உசுர எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்சத் தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா

அட ration card′ல் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சு தட்டு மாத்துவேன்
ஹே ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்

பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாளே என்ன ஒரு வாட்டி

Hey, ஒத்த சொல்லால என் உசுர எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்சத் தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா

அட பொட்ட காட்டுல
ஆலங்கட்டி மழை பெஞ்சு ஆறு ஒண்ணு ஓடுறத பாரு

அட பட்டாம் பூச்சி தான் என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von G.V. Prakash Kumar

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»Otha Sollaala« gefällt bisher niemandem.