Nilavin Niramum Vannam Songtext
von G.V. Prakash Kumar
Nilavin Niramum Vannam Songtext
நிலவின் நிறமும் வண்ணம் கொள்ள
பிறையின் வளைவும் எண்ணம் சொல்ல
எப்படி என்னுயிர் காதலை சொல்வேன்
உயிரை அனுப்பி இதயம் வெல்வேன்
நிழலின் வரவை தடுப்பதெது
உள்ளத்தில் அணுவும் துளிர்க்கிறது
உன் பார்வையை இதுவரை தொலைக்கவில்லை
என் போர்வையில் காதலை மடிக்கவில்லை
கனவும் நினைவும் களையுமா
என் உயிரின் உணர்வும் நிலைக்குமா
எத்தனை காலங்கள் இதயம் உறையும்
மைய்யலை அறிய வா வா
கிளையை தேடும் பறவை நானே
உன் சிறகில் அமர தவிக்கிறேனே
நகர்ந்து உன்னிடம் சேர்ந்திடுவேனோ
அணைத்து அருகில் வாழ்ந்திடுவேனோ
எதிர்த்த திசையில் பறந்து சென்றாய்
சிவந்த இறகை உதிர்த்து போனாய்
மறையும் பொழுதினில் மாற்றமில்லை
உன் நினைவு உயிரை தேற்றவில்லை
உயிர்விடும் இந்த நொடியிலே
உன் முகம் கண்டுகொள்ள ஏங்கிடுவேன்
இறுதி முத்தத்தை தந்திடவே
வந்திடு நீ எந்தன் அன்பே
பிறையின் வளைவும் எண்ணம் சொல்ல
எப்படி என்னுயிர் காதலை சொல்வேன்
உயிரை அனுப்பி இதயம் வெல்வேன்
நிழலின் வரவை தடுப்பதெது
உள்ளத்தில் அணுவும் துளிர்க்கிறது
உன் பார்வையை இதுவரை தொலைக்கவில்லை
என் போர்வையில் காதலை மடிக்கவில்லை
கனவும் நினைவும் களையுமா
என் உயிரின் உணர்வும் நிலைக்குமா
எத்தனை காலங்கள் இதயம் உறையும்
மைய்யலை அறிய வா வா
கிளையை தேடும் பறவை நானே
உன் சிறகில் அமர தவிக்கிறேனே
நகர்ந்து உன்னிடம் சேர்ந்திடுவேனோ
அணைத்து அருகில் வாழ்ந்திடுவேனோ
எதிர்த்த திசையில் பறந்து சென்றாய்
சிவந்த இறகை உதிர்த்து போனாய்
மறையும் பொழுதினில் மாற்றமில்லை
உன் நினைவு உயிரை தேற்றவில்லை
உயிர்விடும் இந்த நொடியிலே
உன் முகம் கண்டுகொள்ள ஏங்கிடுவேன்
இறுதி முத்தத்தை தந்திடவே
வந்திடு நீ எந்தன் அன்பே
Writer(s): Prakash Kumar G V, Siva Ganga Lyrics powered by www.musixmatch.com