Songtexte.com Drucklogo

Negizhiyinil Songtext
von G.V. Prakash Kumar

Negizhiyinil Songtext

நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட எனை தீண்டிடு உயிரே
இவளின் துயர் தீர்த்திட வழி சேர்த்திட விரல் கோர்த்திடு உயிரே

நாலாபுறமும் நாலாயிரம் நீ
ஆனாலும் உனை ஏன் தேடினேன்

நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன்
ஓ ஓ ஓ... ஓ ஓ... ஓ ஓ...

ஏ பவள பாறை படலம் போலே மனதில் நிறைந்தாய்
இமைகள் மூடி திறக்கும் முன்னே எதனால் மறைந்தாய்
உண்மையில் உன் உண்மையில் என் காதலை பிரிந்தேன்
இன்மையில் உன் இன்மையில் உன் தன்மையை அறிந்தேன்
கடந்தோடிடும் கணம் யாவிலும் எனதேக்கமே கணக்கோ


ஏ நெகிழியினில் நெஞ்சம் என்றாய் நெருப்பை ஏன் கேட்கிறாய்
நெருஞ்சி முல்லை போலே நின்றேன் நெருங்கி வர பார்க்கிறாய்

ஓ ஓ ஓ...
உலகம் அறியா குழந்தை எனவே உனை நான் நினைத்தேன்
உனையே உலகம் வணங்கும் பொழுது என் மடமை உணர்ந்தேன்
மாற்றிட எனை மாற்றிட இந்த பூமியே நினைக்க
காதலே நீ மாறினாய் இதை எங்கு நான் உரைக்க
எனை ஏற்றிடு உனை ஊற்றிடு உயிர் ஏற்றிடு உயிரே

நெகிழியினில் நெஞ்சம் கொண்டே நெருப்பை ஏன் கேட்கிறாய்
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறாய்
அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட உனை தீண்டுவேன் அழகே
உனது விழி பார்த்திட விரல் கோர்த்திட துயர் தீர்ந்திடும் உயிரே

நாலாபுறமும் நாலாயிரம் நீ
ஆனாலும் உனை ஏன் தேடினேன்
ஓ ஓ ஓ... ஓ ஓ ஓ... ஓ ஓ ஓ... ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ... ஓ ஓ ஓ... ஓ ஓ ஓ... ஓ ஓ ஓ...

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von G.V. Prakash Kumar

Fans

»Negizhiyinil« gefällt bisher niemandem.