Songtexte.com Drucklogo

Anthaathi Songtext
von Govind Vasantha

Anthaathi Songtext

பேரன்பே காதல்
உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்
சதா...
ஆறாத ஆவல்
ஏதேதோ சாயல் ஏற்று திரியும் காதல்

பிரத்யேக தேடல்
தீயில் தீராத காற்றில்
புல் பூண்டில் புழுவில் உளதில் இளதில்
தானே எல்லாமும் ஆகி நாம் காணும் அருவமே

இத்யாதி காதல்
இல்லாத போதும் தேடும் தேடல்
சதா...
மாறாது காதல் மன்றாடும் போதும் மாற்று கருத்தில் மோதும்
மாளாது ஊடல்

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ

நாம் இந்த தீயில் வீடு கட்டும் தீக்குச்சி
நாம் இந்த காற்றில் ஊஞ்சல் கட்டும் தூசி


நாம் இந்த நீரில் வாழ்க்கை ஊட்டும் நீர் பூச்சி
நாம் இந்த காம்பில் காமத்தின் ருசி

காதல் கண்ணீரில் சிலந்தி
காதல் விண்மீனின் மெகந்தி
காதல் மெய்யான வதந்தி
காலம் தோறும் தொடரும் diary

காதல் தெய்வீக எதிரி
காதல் சாத்தானின் விசிறி
காதல் ஆன்மாவின் புலரி
வாழ்ந்து பெற்ற degree

ஓர்...
விடைக்குள்ளே...
வினாவெல்லாம்...
பதுங்குதே...
ஆ...
நாம்...
கரைந்ததே...
மறைந்ததே...
முடிந்ததே...
ஆ... ஆ... ஆ...


ஆ... ஆ...
கொஞ்சும் பூரணமே வா
நீ...
கொஞ்சும் எழிலிசையே
பஞ்ச வர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம்... ஆ... காதலடி...

காதலே காதலே தனி பெருந் துணையே
கூட வா கூட வா
போதும் போதும்

காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீ...

ஆ...
திகம்பரி...
வலம்புரி...
சுயம்பு நீ... நீ...

ஆ... ஆ... ஆ...
பிரகாரம் நீ...
பிரபாபம் நீ...
பிரவாகம் நீ... நீ...

ஆ ஆ...
சிருங்காரம் நீ...
ஆங்காரம் நீ...
ஓங்காரம் நீ... நீ...

நீ...
அந்தாதி நீ...
அந்தாதி நீ...
அந்தாதி நீ... நீ...

(ம்ம்...
தேட வேண்டாம்
முன் அறிவிப் பின்றி வரும் அதன் வருகையை இதயம் உரக்க சொல்லும்

காதல்
காதல் ஒரு நாள் உங்களையும் வந்து அடையும்

அதை அள்ளி அணைத்து கொள்ளுங்கள்
அன்பாக பார்த்து கொள்ளுங்கள்
காதல் தங்கும்
காதல் தயங்கும்
காதல் சிரிக்கும்
காதல் இனிக்கும்

காதல் கவிதைகள் வரையும்
காதல் கலங்கும்
காதல் குழம்பும்
காதல் ஓரளவுக்கு புரியும்
காதல் விலகும்
காதல் பிரியும்

கதவுகளை மூடாமல் வழி அனுப்புங்கள்

காத்திருங்கள்
ஒரு வேலை காதல் திரும்பினாள்
தூரத்தில் தயங்கி நின்றால்
அருகில் செல்லுங்கள்
அன்புடன் பேசுங்கள்

போதும்
காதல் உங்கள் வசம்
உள்ளம் காதல் வசம்
மாற்றங்கள் வினா
மாற்றங்களே விடை
காதல்)

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Govind Vasantha

Fans

»Anthaathi« gefällt bisher niemandem.